ஆர்டிஐயில் இருந்து தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து..!
The Government Order issued by the Tamil Nadu government exempting its Public Law and Order Department from the RTI Act has been quashed
''சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம்-ஒழுங்கு துறைக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ், தமிழ்நாடு அரசின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான ‘பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த் துறை’ குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது,” என அரசாணையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு திமுக, பாமக, அமமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தவெகவுக்கு ஆதரவளிக்கும் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அத்துடன், இந்த அரசாணைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.''எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Government Order issued by the Tamil Nadu government exempting its Public Law and Order Department from the RTI Act has been quashed