கிருஷ்ணகிரியில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்த அமைச்சர்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஓசூர் பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வசதி, சாலைப் பணிகளை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

மேலும், பாகலூர் & ஓசூரில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குதல், கழகக் கொடி ஏற்றுதல், வேப்பனஹள்ளி - பாகலூர் - சூளகிரி - ஓசூரில் நீர்த்தேக்க தொட்டி, ஊராட்சி மன்ற கட்டிடம், சுகாதார கட்டிடம், நியாய விலைக்கடை கட்டிடம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன் விவரம் பின்வருமாறு:

ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் - பெங்களூர்  வரையிலும், தேன்கனிகோட்டை கிளை வழித்தடத்திலும் செல்லும் வகையிலான புதிய பேருந்துகளை, இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ் அவர்கள், மாநகர மேயர் சத்யா , மாவட்ட ஆட்சியர் சரயு  மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

ஓசூர் மாநகராட்சி, சானசந்திரம் பகுதியில், ரூ.14 இலட்சத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இன்று அமைச்சர் திறந்து வைத்தார்.

ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஆர்.வி. ஆண்கள் மே.நி. பள்ளியில் ரூ.10.50 இலட்சத்தில் 214 மாணவர்களுக்கு இன்று, விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சக்கரமபிணி வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri Minister Sakkarapani


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->