கிருஷ்ணகிரி | தலைகீழாக கவிழ்ந்த மினி சுற்றுலா பேருந்து... பயணிகளின் கதி? - Seithipunal
Seithipunal


சென்னை, அம்பத்தூரில் இருந்து மினி சுற்றுலா பேருந்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 21 பேர் தர்மபுரி, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். 

கிருஷ்ணகிரி பர்கூர் பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென நிலை தடுமாறி நெடுஞ்சாலை தடுப்பில் மோதி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பேருந்து ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri mini tourist bus accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->