சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீராம் நியமனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் ஆர். மகாதேவன். இவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதனால், அந்த பதவி காலியானது. 

இந்த நிலையில், காலியாக இருந்த பதவிக்கு வேறு நீதிபதியை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக கே. ஆர். ஸ்ரீராம் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். 

அதன் படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kr sriram appointed chennai high court chief justice


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->