சிக்கன் கிரேவி, பரோட்டா, கூல்ட்ரின்க்ஸ் குடித்த தாய், மகள் இறப்பில் திடீர் திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம் (வயது 34), இவரின் மகள் தர்ஷினி (வயது 7). கடந்த செவ்வாய் கிழமை இரவு கற்பகவள்ளி மற்றும் அவரது மகள் அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். 

பின்னர், 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே, இதனை கண்ட கற்பகத்தின் தாய் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். 

இந்த மரணம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். 

முதல்கட்டமாக அவர்கள் சாப்பிட்ட சிக்கன் கிரேவி, பரோட்டா, குளிர்பானம் ஆகியவற்றின் மாதிரிகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் தற்போது இவர்களின் மரணம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதன்படி, கற்பகத்தின் வீட்டின் அருகே வசித்துவந்த வீரப்பெருமாள் (வயது 34) என்பவருக்கும், கற்பகத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை கற்பகம் துண்டித்ததால், வீரப்பெருமாள் மிரட்டி உள்ளான், இதன் காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து தாயும், மக்களும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது. 

இதனையடுத்து, கற்பகத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வீரப்பெருமாளை போலீஸார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovipatti maother and daughter dead case


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal