கம்பி நீட்டிய காதலன்., கடுப்பான காதலிக்கு ஏற்பட்ட நிலை.! அதிரடி முடிவால் அதிர்ந்து போன குடும்பத்தினர்.!  - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் இருக்கும் காரமடை பகுதியில் 24 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கின்றார். 

அதில், கடந்த 2019ஆம் வருடத்தில் இருந்து காரமடை பகுதியை சேர்ந்த நிர்மல் குமார் என்ற இளைஞரை காதலித்து  வந்துள்ளார். இத்தகைய நிலையில், நிர்மல்குமார் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். 

இதன்பின் அந்த பெண் பலமுறை தன்னை திருமணம் செய்து கூறியும் நிர்மல்குமார் மறுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்த பெண் வற்புறுத்த ஆரம்பித்துள்ளார். 

இதனை தொடர்ந்து நிர்மல்குமாரின் சகோதரர் கோபிநாத் மற்றும் தாய் செல்வியுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார். அவருக்கு தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். 

இதனை தொடர்ந்து நிர்மல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai lover file case on her boy friend


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal