நாளை விவாகரத்துக்கு விண்ணப்பிகிறோம் : கவுசல்யா முகநூல் பதிவு...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் கவுசல்யா இவர் கல்லூரியில் படிக்கும் போது மாற்று சமுகத்தை சேர்ந்த சங்கர் என்பவரை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இதனால் கடந்த 2016 ஆண்டு கூலிப்படையை ஏவி சங்கரையும், கௌசல்யாவையும் கொலை செய்ய முயன்றனர். அதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார் மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்படது.

இதற்கிடையில்,  கவுசல்யா சக்தி என்பவர் காதலித்து மறுமணம் செய்துகொண்டார். ஆனால் சக்தியின் நடத்தை பற்றி பல விமர்சனங்கள் ஏற்பட்டன. இதற்கிடையில் கவுசல்யா தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ‘ நானும் சக்தியும் பிறிகிறோம். ஓராண்டாக மனதளவில் என்னை காயப்படுத்தியதால் இனி அவரோடு என்னால் வாழ இயலாது. விவாகரத்துக்கு திங்கள் விண்ணப்பிக்கிறோம்’ என்று பதிவிடப்படுள்ளது. என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது. இதனால், கவுசல்யா சக்தியை பிரிகிறாரா? என்ற கேள்வு எழுந்துள்ளது.இது குறித்து தெளிவான பதில்கள் எதுவும் கவுசல்யா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kousalya facebook post about his divorce


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal