#கொடைக்கானல் : சிறுவனை ஆபாசமாக திட்டியதால் தூக்கில் தொங்கிய சோகம்.!  - Seithipunal
Seithipunal


கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த விஜேஸ் பாண்டி என்ற 17 வயது சிறுவன் பெருமாள் மலையை நோக்கி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். மலைப்பாதையில் திரும்பும் நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது அந்த சிறுவர்களின் வாகனமானது மோதி இருக்கிறது.

இதன் காரணமாக காரில் இருந்த நபர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து சிறுவன் விஜேஸ் பாண்டியினை படுமோசமாக ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டி அவர்கள் வந்த வாகனத்தை பறித்துக் கொண்டுள்ளார்கள். இதனால், சண்டை ஏற்பட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த சிறுவர்களை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

வீட்டிற்கு வந்த பின்னர் அங்கு நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் விஜேஸ்பாண்டி திடீரென துக்கம் அதிகமாகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இந்த சம்பவம் பற்றி சிறுவனின் அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மெக்கானிக் வினோத் தங்கராஜ் உள்ளிட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், ஆபாசமாக திட்டுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kodaikanal Child suicide for abusive words


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->