சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்க... இதுதான் காரணம் - அமைச்சர் கே.என்.நேரு.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கூட்டம் இன்று மூன்றாவது நாளாக கூடியது. தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

சென்னையில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 

தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். 

தெரு நாய் பிரச்சனைகளிலிருந்து மக்களை காக்கும் வகையில் அரசு பணிகளை மேற்கொள்ளும். கொரோனா காலகட்டத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டது தான் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. 

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதன் மூலமாக நாய்களின் இனப்பெருக்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். சென்னை மாநகராட்சியில் மழை காலங்களில் நீர் தேங்க மெட்ரோ திட்ட பணிகளே காரணம். 

சென்னை பெருநகர சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க சட்டம் கொண்டுவரபட உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.  75 கோடி மதிப்பில் புதிய மாமன்ற கூடம் கட்டப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KN Nehru says Chennai Rainwater stagnates metro works


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->