முகத்தை கத்தியால் தாக்கி மர்ம உறுப்பை அறுத்து கொலை...! இன்ஸ்டாகிராம் காதல் வலையே கொலைக்குக் காரணமா...?
Killed by attacking face knife and severing genitals Instagram love affair reason murder
திரிசூலம் பகுதியில் வசித்து வந்த செல்வக்குமார் (22) கட்டிடத் தொழிலாளி. கடந்த சில காலமாக, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த ரீனா (24) என்பவருடன் பழக்கம் இருந்த அவர், பிறகு இருவரும் திருமணம் செய்யாமல் தனியாக வாடகை வீட்டில் கணவர்-மனைவி போல் வாழ்ந்தனர்.
இந்நிலையில், ரீனாவின் தோழி ரஜிதா (25) உடன் செல்வக்குமாருக்கு புதிதாக நெருக்கமான தொடர்பு உருவாகியது. மூவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து, சில ஆண்களுடன் சேர்ந்து மதுபானம், உல்லாசம் அனுபவித்தனர்.

இந்த விவகாரம் தெரியவந்ததும், ரீனா மற்றும் ரஜிதா இருவரும் செல்வக்குமாருடன் அடிக்கடி தகராறு செய்தனர்.தகராறு தீர்க்கும் முயற்சியில், இரு பெண்களும் செல்வக்குமாரை திரிசூலம் பூங்காவுக்கு அழைத்து சமாதானம் பேச வித்தனர். ஆனால் அங்கு, மறைந்து இருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர் அலெக்ஸ், கையில் கத்திகளை கொண்டு செல்வக்குமாரை முகத்தில் வெட்டினர்.
இதனால் செல்வக்குமாரின் கண், வாய் மற்றும் முகத்தின் பல பகுதிகள் கடுமையாக காயமடைந்தது. ரத்தத்தில் மூழ்கிய அவர், ஆத்திரத்தில் அவரின் மர்ம உறுப்பும் அறுத்தப்பட்டது.
செல்வக்குமார் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தோர் ஓடிவந்ததால், குற்றவாளிகள் நால்வரும் தப்பி ஓடினர். சம்பவத்தை அறிந்த பல்லாவரம் போலீசார் உடனடியாக செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பினர். ஆனால், மருத்துவசிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விசாரணையில், செல்வக்குமாரின் ‘ரீல்ஸ்’ பதிவில் ரீனாவுடன் வாழ்ந்த காலத்தை “என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பரிசு என் பொண்டாட்டிதான்” என குறிப்பிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே சமயம், ரீனா மற்றும் ரஜிதா இன்ஸ்டாகிராம் மூலம் பல வாலிபர்களிடம் காதல் வலை விரித்து பணம் பறித்தனர் என்பதும் தெரிந்தது.இதனை அறிந்து செல்வக்குமார் தட்டிக்கேட்டதும், இரு பெண்களும் நண்பர்கள் உதவியுடன் அவரை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது .இந்த சம்பவத்தில் ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
Killed by attacking face knife and severing genitals Instagram love affair reason murder