காதலி வீட்டிற்கு வந்து மீன் குழம்பு சாப்பிட்ட காதலன் வாந்தி எடுத்து மரணம்..! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள இடுக்கி மூணாறு பகுதியை சார்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கங்கைகொண்ட சோழபுரம் பகுதியை சார்ந்த பெண்மணி பணியாற்றி வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் காதலை இருதரப்பு பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் வரும் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் இரண்டாம் அலைபரவல் காரணமாக நிஷாந்தின் நிறுவனத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் இருந்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நிஷாந்த் வருகை தந்துள்ளார். 

நிஷாந்திற்கு சாப்பிட மீன் குழம்பு வைத்து கொடுக்கப்பட்ட நிலையில், நிஷாந்த் மீன் குழம்பை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். பதறிப்போன பெண்ணின் குடும்பத்தினர் நிஷாந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மீன்சுருட்டி காவல் துறையினர், நிஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Love Boy Mystery Death an Love Girl Ariyalur House 12 May 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->