ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மேல் முறையீடு.!! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற, இறக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்தது.

மேலும் கோயம்பேட்டில் கேரேஜ் உள்ள ஆம்னி பேருந்துகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த விசாரணை முடிவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கப்படலாம் அல்லது தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kelambakkam omni Bus owners appeal case hearing in sc


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->