கரூர் திமுகவினரின் அராஜக தாக்குதல்.. அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.. கரூர் மாவட்ட எஸ்பி விளக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் நடைபெற்ற சோதனையின் பொழுது வருமானவரித்துறை அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சந்தரவதனன் விளக்கம் அளித்துள்ளார். இதோட பாக்க அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக எந்தவித முன் தகவலையும் மாவட்ட காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறையினர் சோதனைக்கு முன்பு மாவட்ட காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்பது வழக்கமாக நடைபெறும். சோதனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அசோக் வீட்டில் நடைபெற்ற பிரச்சனைக்கு பிறகு 2 ஏ.டி.எஸ்.பி, 5 டி.எஸ்.பி, 11 காவல் ஆய்வாளர்கள் உட்பட 150 போலிசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்பொழுது வரை எத்தனை இடங்களில் வருமான வரித்துறை என சோதனை நடத்தி வருகிறார்கள் என்கிற தெளிவான தகவலை காவல்துறையினிடம் தெரிவிக்கவில்லை.

அசோக் வீட்டில் நடைபெற்ற பிரச்சனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளோம். வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் பிரச்சனை ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்" என விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வந்த பல்வேறு இடங்களில் அதிகாரிகளை திமுக தொண்டர்கள் விரட்டி அடித்ததால் 6 வாகனங்களில் வந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur SP explained that IT officials did not inform about raid


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->