தன்னார்வலர்கள் என்ற பெயரில் திமுக ஆதரவு... பள்ளபட்டியில் திமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு.! காவல்துறை குவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பள்ளப்பட்டி பகுதியில் திமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில், பணியில் ஈடுபட்டு இருந்த தன்னார்வலர்கள் திமுகவிற்கு வாக்களிக்க கூறி மக்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அங்கிருந்த பாஜகவினர் தன்னார்வலர்களிடம் விசாரிக்கவே, அப்பகுதியில் இருந்த திமுகவினர் தன்னார்வலர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பினர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் இருதரப்பையும் அப்புறப்படுத்தி அனுப்பவே, நிலைமை கையை மீறி செல்லலாம் என்பதால் கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்ட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Pallapatti DMK BJP Clash Push Police Protection Increased TN Election 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->