கருப்பத்தூர் ரௌடி கொலை வழக்கு.. மொத்தமாக 8 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கருப்பத்தூர் ரௌடி கோபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் கைதாகியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை கருப்பத்தூர் பகுதியை சார்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 52). இவன் அப்பகுதியில் ரௌடியாக வலம்வந்த நிலையில், கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்ற பழமொழிக்கேற்ப, கடந்த 6 ஆம் தேதி கொலை செய்யப்பட்டான். 

இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்த, குளித்தலை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர், கோபால கிருஷ்ணனை கொலை செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவ்வழக்கில் தொடர்புடைய பிறரையும் கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கரூர் ரௌண்டானா பகுதியில் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த குமுளி ராஜ்குமார் (வயது 41), இசக்கி குமார் (வயது 49) என்பது தெரியவந்தது. 

இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Lalapettai Rowdy Gopala Krishnan Murder Case Totally 8 Culprits Arrested by Police


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal