தன்னிச்சையாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்த எச்.எம்... வறுத்தெடுத்த ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை அருகேயிருக்கும் பொரணி அரசுமேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஆசிரியைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்களது ஏற்பாட்டின் பேரில் சுகாதாரத்துறையினர் பள்ளியில் உள்ள பிற ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இதன்போது, பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. அங்கு பொறுப்பில் இருந்த தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரத்திடம் ஆட்சியர்கள் கேட்ட சமயத்தில், அவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சில ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் உள்ள நிலையில், பிற ஆசிரியர்கள் எங்கே? என கேட்கையில், அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தியிடம் பள்ளிக்கு விடுமுறை வழங்க அனுமதி அளித்து உத்தரவு வழங்கப்பட்டதா? என ஆட்சியர் கேள்வி எழுப்புகையில், அவர் நான் ஏதும் ஒப்புதல் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதனால் கொதித்தெழுந்த மாவட்ட ஆட்சியர், தன்னிச்சையாக முடிவெடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஏன்?. ஆசிரியர்கள் எதற்காக உண்மையில் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்கள்? என்று விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அதிகாரிக்கு சம்மன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொறுப்பு தலைமை ஆசிரியரிடமும் பல சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur Govt School Announced Own Leave to School District Collector Raise Question to HM and DEO


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->