'அண்ணாமலையாருக்கு அரோகரா'.. விண்ணுலகும் முழங்கும் கோஷத்துடன் ஏற்றப்பட்டது கார்த்திகை மஹா தீபம்..!
Karthikai Maha Deepam lit in Annamalaiyar Temple
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று 2,668 அடி உயர மலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ' அண்ணாமலையாருக்கு அரோகரா..அரோகரா' என விண்ணெங்கும் முழங்கும் கோஷத்துடன், பக்தி பரவசத்துடன் மகா தீபத்தை கண்டு கைகூப்பி கண்டு வழிபட்டனர்.
கடந்த, 24-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 03-ஆம் தேதி, முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள், 'ஏகன் - அனேகன் இறைவன் அடி வாழ்க' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 04:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பிறகு பக்தர்கள் புடைசூழ மாலை, 06:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

முன்னதாக, மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டன.
கார்த்திகை மகாதீப விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாக்கோலம் பபூண்டுள்ள அண்ணாமலையார் கோவிலை இன்று பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
English Summary
Karthikai Maha Deepam lit in Annamalaiyar Temple