100 இல் சென்று, 108 இல் பிணமாக திரும்பிய இளைஞன்.. அதிவேக பயணத்தால் செத்துப்போன சோகம்.! - Seithipunal
Seithipunal


வில்லுக்குறி அருகே போக்குவரத்து மிகுந்த சாலையில், அதிவேகத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளான சோகத்தில் இளைஞன் உயிரிழந்தான். 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவன் அபினேஷ் ராஜ். இவன் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். 

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அபினேஷ் ராஜ், சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சாலையில் செல்லும்போது பொறுமையாக செல்ல வேண்டும், 100 இல் சென்றால் 108 இல் உயிரின்றி திரும்புவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இதுபோன்ற இளைஞர்களால் அவர்களின் உயிருக்கு பாதிப்பு மட்டுமல்லாமல், மற்றவரின் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari bike Accident Youngster Died High Speed Police Investigation 13 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal