மழைக்கால அவசர உதவிக்கான தொலைபேசி எண்.! கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், " கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் 1 முதல் 4ஆம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வெள்ள சேத விபரங்கள் மற்றும் வெள்ளம் ஆகிய விவரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanniyakumari collector announcement about rain emergency contact number


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->