கனியாமூர் பள்ளி கலவர வழக்கு:  நீதிமன்றத்தில் 430 பேர் ஆஜர்...ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!  - Seithipunal
Seithipunal


கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 430 பேர் ஆஜர்ஆனர்.மேலும் இந்த வழக்கை மீண்டும் ஜூலை 19-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், ஸ்ரீமதி சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ,போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இந்த கல் வீச்சில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து பள்ளியின் நாற்காலிகள், பள்ளி பஸ்கள், போலீஸ் வாகனம், தடுப்புகளுக்கு தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இந்த கலவர சம்பவம் குறித்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று 615 பேர் ஆஜராக உத்திரவிடப்பட்டது.வந்தது.அதன்படி  இன்று காலை நீதிமன்றத்திற்கு 430 பேர் வருகை தந்தது நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இச்சம்பவம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தி இந்த வழக்கை மீண்டும் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஒரே சமயத்தில் நீதிமன்றத்திற்கு 430 பேர் வருகை தந்ததால்  நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kaniyamaur school riot case 430 people present in courtadjourned to July 19


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->