''கம்பீரமாக தன் பணிகளை செய்த இளைஞர்'' - வெற்றி துரைசாமி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
kamalhaasan condoles Vetri Duraisamy dead
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவு செய்தி துயரத்தை உள்ளாக்குகிறது.
வாழ தொடங்கும் வயதில் கம்பீரமாக தன் பணிகளை செய்து வந்த இளைஞர் விபத்தில் இறுதியை அடைந்தது எண்ண தாளாத துக்கம்.
மகனை இழந்து தவிக்கும் தந்தையை மனதோடு ஆறுதல் தெரிவித்து தழுவி கொள்கிறேன். அவர் விரைவில் இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
kamalhaasan condoles Vetri Duraisamy dead