9 பெண்களை முகநூலில் ஏமாற்றி உல்லாசம்.. நகை, பணம் பறிப்பு..! கள்ளக்குறிச்சியில் பிராடு கும்பல் கைது.!! 
                                    
                                    
                                   Kallakurichi Woman Cheated by Strange Facebook Friend Investigation Revokes Truth 9 Woman Cheated 
 
                                 
                               
                                
                                      
                                            கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கடுவனூர் கிராமத்தை சார்ந்தவர் உமைபாலன். இவரது மனைவி பாலின் ராணி (வயது 27). ராணி - உமைபாலன் தம்பதிகள் சங்கராபுரம் கிராமத்திலேயே ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளனர். 
கடந்த ஜனவரி மாதத்தில் ராணிக்கு முகநூல் மூலமாக அறிமுகமான நண்பர், வாட்சாப் வாயிலாகவும் பேசி வந்துள்ளார். பின்னர், அவர் ராணியை பார்க்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்த நிலையில், கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பார்த்துவிட்டு தருவதாக கேட்டுள்ளார். 

ராணியும் அவரது நகையை கொடுத்த நிலையில், துணி கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்திருந்ததால் வியாபாரத்தை கவனித்துள்ளார். இதன்போது, அந்த நபர் நைசாக அங்கிருந்து காரில் தப்பி சென்ற நிலையில், ராணி சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
பாலின் ராணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சங்கராபுரம் அருகேயுள்ள சு.குளத்தூர் சந்திப்பில் காவல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். 
இதன்போது, அவ்வழியாக வந்த காரில் வந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் விசாரிக்கையில், அவர்கள் முன்னுக்கு பின்னர் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சார்ந்த மனோஜ் குமார் (வயது 27), கவுதம் (வயது 27) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் தான் பாலின் ராணியிடம் நகையை பறித்து சென்றவர்கள் என்பதும் அம்பலமானது.
மேலும், இவர்கள் தமிழகம் முழுவதும் முகநூல் வாயிலாக 9 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேசி நட்பாக பழகி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பயன்படுத்தி பெண்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்தும் அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
                                     
                                 
                   
                       English Summary
                       Kallakurichi Woman Cheated by Strange Facebook Friend Investigation Revokes Truth 9 Woman Cheated