நாடகக்காதல் அட்டகாசம்.. மீண்டும் உளுந்தூர்பேட்டையில் பயங்கரம்..! பெண் அரிவாளால் வெட்டிக்கொலை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை கூத்தலூர் கிராமத்தை சார்ந்தவர் பழனியாபிள்ளை. இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக உடல்நலக்குறைவால் இயற்கையை எய்திவிட்டார். இவரது மகள் பிரேமா (வயது 20). 

இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் இருந்த வேலைகளை செய்துகொண்டு இருந்த சமயத்தில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் பிரேமாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். 

உயிருக்கு போராடிய பிரேமாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலியாகினார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், பிரேமாவிற்கு கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அம்மையாகரம் கிராமத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் பாலா (வயது 30) காதல் தொல்லை கொடுத்து வந்ததும், இதனை பிரேமா ஏற்க மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், அவருக்கு மற்றொரு இடத்தில் பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். 

இதனை அறிந்த கொடூரன் பாலா பிரேமாவை கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும், 2 பேர் வந்து கொலை செய்தது காதல் தொல்லை கொடுத்தவனா? அல்லது காதல் என்ற போர்வையில் நடித்து வந்தவன் ஏவிய கூலிப்படையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Ulunthurpet 20 Aged girl Prema Murder by Drama Love Culprits 29 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal