கள்ளக்குறிச்சி அருகே கொடூர விபத்து! மொத்த குடும்பமும் பலியான பெரும் சோகம்!
kallakurichi car accident
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் காரில் சென்ற ஆயுதப்படை காவலர் மாதவன் பயணத்தின் போது, திடீரென காரின் டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், சங்கீதா, சுபா, தனலட்சுமி மற்றும் ராகவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து காரணமாக சாலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
English Summary
kallakurichi car accident