கள்ளக்குறிச்சி அருகே கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா!
Kallakurichi Actor Jeeva Car Accident
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
முதல்கட்ட தகவல் படி, தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நடிகர் ஜீவாவுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகனம் திடீரென சாலையின் குறுக்கே வந்ததால், விபத்தை தவிர்க்க முயன்ற போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனது குடும்பத்தினருடன் நடிகர் ஜீவா சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
English Summary
Kallakurichi Actor Jeeva Car Accident