#TNBUDGET2023 : கருணாநிதி பெயரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை.! எங்கு தெரியுமா? வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்த 2023-ம் வருடத்திற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 9ல் கூடியது. அதன் பின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பட்ஜெட் தாக்களுக்காக மீண்டும் சட்டப்பேரவை கூடியது.

சபாநாயகர் அப்பாவு திருக்குறள் வாசித்து சபையை துவங்கி வைத்தார். இதை அடுத்து நிதி அமைச்சர் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டார். அதன் பின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான இ பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்து வரும் நிலையில், தற்போது சென்னை கிண்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். மேலும், ஏற்கனவே மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அதிநவீன வசதிகளுடன் கூடிய நூலகமும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இதற்கு கலைஞர் நூலகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalangar multi speciality hospital in guindy tn budget 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->