பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோவில் கைது..!
Kabaddi coach arrested for sexually harassing schoolgirls under POCSO
கபடி பயிற்சி கொடுக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது வந்த கபடி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் எஸ்.ஆர்.எஸ். நகரை சேர்ந்த 38 வயதுடைய அருண்குமார். இவர் அந்த பகுதியில் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மேலும், சூலூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் 04 மாணவிகள், பள்ளியில் உள்ள மைதானத்தில் தனியாக இருந்த போது, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று அருண்குமார் அழைத்துச் சென்று, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி பாதிக்கப்பட்ட மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் இது குறித்து கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கபடி பயிற்சியாளர் அருண்குமார், பயிற்சி கொடுக்கிறேன் என்ற என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அருண்குமாரை கைது செய்துள்ள போலீசார், அவர் வேறு மாணவிகளுக்கு இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா.? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kabaddi coach arrested for sexually harassing schoolgirls under POCSO