தமிழகத்தில் காலையிலேயே கோர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,865 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் 1,654 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 45,814 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் நேற்று மட்டும் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19 - னால் பாதித்தவர்களில் இதுவரை 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் 2 மருத்துவர்கள், 2 காவலர்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 25 corona report in thiruvarur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal