பிரமாண்டமாக நடைபெறும் ஜே.பி நட்டாவின் ரோடு ஷோ.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் திருச்சியில் வாகன பேரணி நடத்துகிறார். 

அதன் படி, காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி எனக்கூறி காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.

இருப்பினும், நீதிமன்ற அனுமதியின் பேரில் மாற்று பாதையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி நடைபெற்று வருகிறது. தில்லை நகர் சாலையில் தொடங்கி இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை வாகன பேரணி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் அவர் கூட்டணி கட்சியான அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். 

இதற்காக திருச்சிக்கு வந்த ஜே.பி. நட்டாவுக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி நடைபெறும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jp natta road show start in trichy


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->