ஈரோட்டில் கைவரிசை, 150 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருட்டு!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஆடிட்டர் வீட்டில் நேற்று இரவு திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 235 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றதாக விசாரணையில் கூறப்படுகிறது.

ஈரோட்டில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிக்கும் 69 வயதான சுப்ரமணி என்பவரது வீட்டில் இந்த திருட்டு  சம்பவம் அரங்கேறி உள்ளது.

தனியார் கல்லூரி பேராசிரியரான சுப்ரமணி மற்றும் அவரது மனைவி சாதனா இருவர் மட்டும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகன் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுப்ரமணியும், சாதனாவும் தேனிக்கு சென்றுள்ளனர். கீழ் தளத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் சுப்ரமணியின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைதொடர்ந்து சுப்ரமணி ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 150 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

"சுப்ரமணி திரும்பிய பிறகு முழு விவரம் தெரியவரும். வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கொள்ளை நடந்திருக்கலாம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jewels and money were stolen in erode


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->