செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு சிக்கல்? முக்கிய புள்ளி வீட்டில் ஐடி ரெய்டு! பதறும் திமுக! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓஎம்ஆர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வாரியத்திற்கு தேவையான மின்மாற்றி போன்ற உபகரணங்களை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தார்கள் ஆகியோரை குறி வைத்து இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் உட்பட பல்வேறு உபகரணங்கள் கொள்முதல் செய்தது முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னால் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரி கிடையாது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற்று பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராக இருந்துள்ளார்.

மின்சார வாரியத்தில் டெண்டர் விடுவதில் தொடங்கி மின்சார வாரியத்தை தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யும் வரை அனைத்திலும் காசியின் தலையிட இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தவரும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் முட்டுக்கட்டையாக விழுந்திடுமோ என திமுகவின் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITraid at Senthil Balaji assistant Kasi house


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->