குலசேகரப்பட்டினத்தில் இருந்து எப்போது விண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும்? குட் நியூஸ் சொன்ன இஸ்ரோ தலைவர் நாராயணன்..! - Seithipunal
Seithipunal


குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றை  இஸ்ரோ தலைவர் நாராயணன், தனது குடும்பத்துடன் தனிப்படகில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:

10 ஆயிரத்து 360 கோடி ரூபாய் செலவில் ஜூலை மாதத்தில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து synthetic aperture radar தொழில் நுட்பத்தில் உருவான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து கண்காணித்து பேரிடர் , கால நிலை போன்ற தகவல்கள் அனுப்ப முடியும் என்றும், இது இந்திய மக்களுக்கு பெருமிதமான தருணம் என்று கூறியுள்ளார். அத்துடன், இன்னும் 60 நாட்களில் இந்த செயற்கை கோள் அனுப்பும் தகவல்கள் பொதுமக்கள் பயன்படும் விதத்தில் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், இந்திய மக்களை பாதுகாக்கவும் இஸ்ரோ உதவி வருகிறதாகவும்,' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது 25 செயற்கைக்கோள் சிறப்பாக துல்லியமாக செயல்பட்டன என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால் கூடுதல் தகவல்கள் கூற முடியாது எனவும், 1000 கோடி ரூபாய் செலவில் நாட்டின் 02-வது ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமையள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன், 2300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் உதவியோடு இஸ்ரோ பெற்றுள்ளதாகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் கடலுக்கு நடுவில் உள்ள கண்ணாடி பாலம் வித்தியாசமாகவும், நன்றாக உள்ளதாகவும், இதற்கு  தமிழக அரசுக்கு பாராட்டுகள் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO Chairman Narayanan announces when rocket will be launched from Kulasekarapatnam


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->