60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; டிரம்ப் அறிவிப்பு!
Israel agrees to a 60-day ceasefire Trump announces
60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்தநிலையில் காசா போரை இஸ்ரேல் நிறுத்தும்படி பணய கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒரு விரிவான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி, 50 பணய கைதிகளையும் திரும்ப அழைத்து, காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வேர வேண்டும் என அவர்கள் நேற்று வலியுறுத்தினர்.
'
இந்த நிலையில்தான், 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ''60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என டிரம்ப் கூறியிருப்பது முழு அளவிலான போர் நிறுத்தம் ஏற்ப்டுவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
English Summary
Israel agrees to a 60-day ceasefire Trump announces