திமுகவில் இணைவதில் சிக்கலா? ஆளூர் ஷாநவாஸ் குறித்து பரவும் தகவல்கள்; தனிக்கட்சி தொடங்கும் திட்டமா?பரபர ப்ளான்!
Is there a hitch in joining the DMK Rumors circulate about Aloor Shahnawaz is there a plan to launch a separate party A sensational move
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும், கட்சி தாவல்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகியான ஆளூர் ஷாநவாஸ் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக நீண்ட காலம் செயல்பட்ட ஆளூர் ஷாநவாஸ், தொலைக்காட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் கட்சியின் கருத்துகளை வலுவாக முன்வைத்து வந்தவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், பின்னர் வழங்கப்பட்ட கட்சிப் பொறுப்பிலும் முழு திருப்தி இல்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.
சமீபத்தில் விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மேலும் சில நிர்வாகிகளும் திமுகவுக்கு செல்லலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அந்தப் பட்டியலில் ஆளூர் ஷாநவாஸின் பெயரும் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திமுக தரப்புடன் அவரது ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவின. குறிப்பாக, திமுகவில் இணைந்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு முக்கிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், துணைப் பொதுச்செயலாளர் போன்ற உயரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து திமுக தலைமை ஆலோசனை நடத்தியபோது, கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன், வெளிக்கட்சியில் இருந்து புதிதாக வருபவருக்கு உடனடியாக உயரிய பொறுப்பு வழங்குவது சரியான நடைமுறையாக இருக்காது என்ற கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுகவில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் மூத்த இஸ்லாமிய நிர்வாகிகள் இருக்கும் நிலையில், அவர்களை புறக்கணித்து புதியவருக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், உடனடியாக எந்தக் கட்சியிலும் இணையாமல், முதலில் தனக்கென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் யோசனையில் ஆளூர் ஷாநவாஸ் இருப்பதாகவும், பின்னர் அந்தக் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் வகையில் அரசியல் வியூகம் வகுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணைவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது பொறுப்பு தொடர்பான விவரங்கள் குறித்து இதுவரை திமுக அல்லது ஆளூர் ஷாநவாஸ் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இவை அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Is there a hitch in joining the DMK Rumors circulate about Aloor Shahnawaz is there a plan to launch a separate party A sensational move