'ஆடி மாசத்தில் மனைவி ஊருக்குப் போனா ஆட்டம் தானா'...? - பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ரூட் விட்டு ஹனிட்ராப்பில் சிக்கிய வாலிபர்...!
Is it joke if my wife goes home month of Aadi young man who left his roots neighbor girl and got caught honeytrap
சென்னை சூளைமேட்டில் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, மற்றொரு பெண்ணிடம் பழகி காதல் வலையில் சிக்க வைக்க முயன்றதாக கூறப்படும் மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரை, அதே பெண்ணும் அவரது நண்பர்களும் சேர்ந்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சுதர்சன், 32. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி சுதர்சனின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் சுதர்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அவரது வீட்டின் கீழ்தளத்தில் நமீதா, 22, என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார்.

மனைவி வீட்டில் இல்லாத சூழ்நிலையில் நமீதாவிடம் சுதர்சன் பழகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு காதல் வசனங்கள் பேசியுள்ளார்.சுதர்சன் தன்னிடம் பேசிய உரையாடல்களை நமீதா பதிவு செய்து, தனது தோழி மோனிகாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த உரையாடல்களை பயன்படுத்தி சுதர்சனை மிரட்டி பணம் பறிக்க இருவரும் திட்டமிட்டதாக தெரிகிறது.இந்த திட்டத்தில் மோனிகாவின் கணவர் பாலகிருஷ்ணன், அவரது நண்பர் கணேஷ் மற்றும் மற்றொரு தோழி சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்ததாக கூறப்படுகிறது.தன்னை காதலிப்பதாக நம்பவைத்த நமீதா, கடந்த 27-ந்தேதி சுதர்சனை தனது தோழி மோனிகாவின் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.அங்கு சென்ற சுதர்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்ததாக கூறப்படுகிறது.
நமீதா உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அவரை வீட்டுக்குள் அடைத்து வைத்ததாகவும், செல்போனில் அவர் பேசிய காதல் உரையாடல்களை காண்பித்து மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உரையாடல்களை அவரது மனைவிக்கு அனுப்பினால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் என்றும், காவலர்களிடம் புகார் அளித்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் கூறி ரூ.5 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சுதர்சன் தெரிவித்ததாகவும், இதனால் அவரை தாக்கி பணத்தை ஏற்பாடு செய்து வருமாறு மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 29-ந்தேதி சுதர்சனை மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை தாக்கியதுடன், நமீதாவின் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளையும் இனிமேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுதர்சன், நடந்த சம்பவம் குறித்து தனது மனைவியிடம் செல்போன் மூலம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அப்போது அவரது மனைவி, கவலைப்பட வேண்டாம் என்றும், இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ளலாம் என்றும் கணவருக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.இதையடுத்து சுதர்சனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி சூளைமேடு காவல் நிலையத்துக்குச் சென்று கடந்த 4-ந்தேதி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.விசாரணையின் முடிவில், சுதர்சனை தாக்கி சித்ரவதை செய்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் நமீதா உள்ளிட்ட 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Is it joke if my wife goes home month of Aadi young man who left his roots neighbor girl and got caught honeytrap