‘ஆய்வு’ வெறும் விளம்பரமா...? பள்ளி உணவில் பல்லி கிடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அந்த உணவை உட்கொண்ட 17 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிஞ்சுக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மாணவர்களின் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதாகக் கூறி அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நடத்தும் நிகழ்வுகள் வெறும் விளம்பர நடவடிக்கைகளாக மாறிவிட்டனவா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்திருப்பதே, பள்ளிகளில் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் அதிகாரிகளின் கண்காணிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு வேதனையான எடுத்துக்காட்டு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

உணவு தயாரிக்கப்படும் இடங்களில் முறையான சுகாதாரப் பரிசோதனைகள், தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதுபோன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை முழுமையாக விசாரித்து, அவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட 17 மாணவர்களுக்கும் உரிய மற்றும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் பள்ளி மாணவர்களின் உணவு பாதுகாப்பில் எந்தவித சமரசமும் ஏற்படாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரம், தயாரிப்பு முறை மற்றும் சுகாதார நிலையை ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Aayvu just advertisement Nayinar Nagendran condemns incident lizard found school food


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->