உலக பெண் குழந்தைகள் தினம்!.
International Day of the Girl Child
உலக பெண் குழந்தைகள் தினம்!.
உலக பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11 ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 'பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இத்தினத்தின் நோக்கமாகும்.
ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் வளர்ச்சியை வலியுறுத்தும் விதமாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான திரு.மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!.
தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான திரு.மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!.
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள குளத்தூரில் பிறந்தார்.
மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.
தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.
தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான நீதி மன்றத்தில் தமிழில் வாதிட குரல் எழுப்பிய முதல் தமிழர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 62வது வயதில் 1889 ஜூலை 21 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
International Day of the Girl Child