பறவைக்காய்ச்சல் எதிரொலி - நாமக்கல் கோழிப்பண்ணையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இந்த முட்டைகள் தமிழகம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் நோய் தமிழக பண்ணையாளர்களை கவலையில் மூழ்கடித்துள்ளது

அந்த வகையில், திருவனந்தபுரம் பெருமாங்குழி பகுதியில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கேரளா அரசு சுமார் இரண்டாயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழிப்பதற்கு முடிவு செய்துள்ளது மட்டுமல்லாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினசரி சுமார் 1 கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பறவைக்காய்ச்சலால், தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என்று கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். 

ஆனால், நாமக்கல் பகுதியில் தட்பவெப்பநிலை சூழ்நிலை நிலவுவதால், பறவை காய்ச்சல் நோய் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. 

இருப்பினும், நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப்பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிர படுத்தி வருகின்றனர். இதேபோல் பெரும்பாலான பண்ணைகளில் வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பிறகுதான் பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

intensity Precautionary measure in namakkal Poultry farm


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->