நூதன முறையில் பண மோசடி...! கரூரில் பரபரப்பு....! - Seithipunal
Seithipunal


சில்லறை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணதிருட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

கரூர் சின்னாண்டான்கோவில் பகுதியில் நிறைய கடைகள் உள்ளன. இதில், குறிப்பாக கட்டுமான பனிகளுக்கு தேவையான டைல்ஸ், கிரானைட் போன்றவை விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள வந்தனா மார்பிள்ஸ் என்ற கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அங்கு வந்த இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரவேண்டும் என கூறி சில்லைரை கேட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்டு 20 வது 500 ரூ நோட்டுகளை கொடுத்துள்ளார். அதனை எண்ணி பார்ப்பது போல பத்து 500ரூ நோட்டுகளை மறைத்து வைத்து கொண்டு மீதமுள்ள நோட்டுகளை கொடுத்து விட்டு 100 ரூ நோட்டுகளாக கேட்டுள்ளனர். அவர்கள் தந்த நோட்டுகளை எண்ணி பார்காமலேயே கல்லாவில் போட்டுள்ளார். 100 ரூபாய் நோட்டுகள் இல்லை என கூறியுள்ளார் உரிமையாளர். ஆனால் மறுபடியும் பரவாயில்லை 500 ரூபாயாகவே கொடுங்கள் என கூறியதால் மீண்டும் 20 வது 500ரூ நோட்டுகள் கொடுத்துள்ளார். இதேப்போல மற்றோரு  முறையும் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று கடையின் வரவு செலவு கணக்கை பார்த்த போது 1000 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் கடையில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்துள்ளார் அதில் அந்த இளைஞர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. அருகில் இருந்த கடைகாரர்களிடம் இதுபற்றி தெரிவித்த போது அவர்கள் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர்களும் ஏமாற்றபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், காவல்துறையிடம் அவரகள் புகார் அளித்தனர்.      இது போல மற்ற யாரும் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Innovative money laundering in Karur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->