கமல்ஹாசனை சந்தித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்..!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான லார்ட் வேவர்லி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை, அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, அவர்கள் இருவரும் உலகளாவிய கலாசாரத்தை உலகெங்கும் பறைசாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கு குறித்து  விவாதித்தனர் . 

மேலும், சில நாட்களுக்கு முன்பு ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்வதற்கான முக்கியத்துவம் பற்றியும் விவாதம் செய்தனர். 

இந்த சந்திப்பின்போது இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது, "கமல்ஹாசன், இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டவர். உலகில் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறையும் கொண்டவர்" என்று லார்ட் வேவர்லி தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடு என உலகமெங்கும் உள்ள சிக்கல்களை எத்தகைய சூட்சுமத்தோடு அணுக வேண்டும் என்பது குறித்தும், அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

கருத்துக்களை பரிமாறிக் கொண்ட பிறகு கமல்ஹாசன் தெரிவித்ததாவது, "நம்முடைய மக்கள் பற்றியும் மக்களின் வளர்ச்சிப் பற்றிய அறிவை குறித்தும் உலகத் தலைவர்களுடன் விவாதிப்பதிலும் , அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட் வேவர்லி என்னை சந்தித்ததற்கு மிக்க நன்றி, விரைவில் மீண்டும் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland MP lord wevarly meet kamalhasan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->