சமூக வலைத்தளங்களில் காதல் வலை; விடிய விடிய சாட்டிங்; பல பெண்களை ஏமாற்றி தகாத உறவு; நயமாமாக பேசி பணம், நகைகள் பறித்து எஸ்கேப் ஆன ஆசாமி..!
Individual arrested for defrauding multiple women via social media engaging in illicit relationships and absconding after swindling money and jewelry
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்தவர் 36 வயதான திருமணமான ராம்குமார். இவர் பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். அதில் சிக்கிய பலரிடம் திருமண ஆசை காட்டி விடிய விடிய சேட்டிங் செய்து பழக்கத்தை நெருக்கமாக்கியுள்ளார்.
அத்துடன், தனிமையில் சந்திக்கலாம் எனக்கூறி பெண்களுடன் தகாத உறவில் இருந்ததுடன், அதே பழக்கத்தை வைத்து, அவசர தேவை என பலரிடமும் பணம் வாங்கியும் ஏமாற்றியுள்ளார்.
அவரிடம் பாதிக்கப்பட்ட திருமணமான பெண் ஒருவர், தன்னிடம் இருந்து நான்கரை சவரன் தங்க நகைகளையும், 05 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வாங்கி ஏமாற்றிவிட்டதாக, ராம்குமார் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நகை மற்றும் பணத்தை பறிக்கும் வரை அமைதியாக இருந்தவர், அதன் பின்னர் தன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாக அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். அதன்படி, சத்யா நகர் பகுதியில் சென்று கேட்டபோது ராம்குமார் ஏற்கனவே கொலை மற்றும் வழிப்பறி, காவல் ஆய்வாளர் பெண் உட்பட பல பெண்களை ஏமாற்றி குண்டாஸ் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வெளிவந்த ஜாமீன் கைதி என அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது..
இதனையடுத்து அதிரடியாக ராம்குமாரை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவரின் காதல் விளையாட்டு வரலாறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை விருதுநகர் சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Individual arrested for defrauding multiple women via social media engaging in illicit relationships and absconding after swindling money and jewelry