ரூ.5 லட்சம் பரிசு வழங்கும் ரெயில்வே! டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி!
indian Railway Digital Clock
சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டி ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்நிலையங்கள் மற்றும் நடைமேடைகளில் பயன்படுத்தக் கூடிய முறையில் புதிய டிஜிட்டல் கடிகார வடிவமைப்புகளை உருவாக்கவே இந்த போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்கள் என மூன்று பிரிவுகளில் பங்கேற்கலாம்.
இவ்விருப்பப் பரிசு தவிர, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து ஆறுதல் பரிசுகளாக தலா ரூ.50,000 மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் மே 1 முதல் மே 31 வரை தங்கள் வடிவமைப்புகளை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டிக்கான வழிமுறைகளைப் பற்றி ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறியதாவது: “சமர்ப்பிக்கப்படும் வடிவமைப்புகள் முற்றிலும் ஒரிஜினல், சுய உருவாக்கமாக இருக்க வேண்டும். எந்தவொரு லோகோவோ அல்லது வாட்டர்மார்க்கோ இருக்கக்கூடாது. அதற்கான சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த முயற்சி, புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வேயின் சீரமைப்புப் போக்கை வெளிப்படுத்துகிறது.
English Summary
indian Railway Digital Clock