2026: கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்து - இந்திய அணியின் முழு அட்டவணை!
Indian cricket in 2026 ipl and 3 World Cups
புதியதாகப் பிறந்துள்ள 2026-ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஒரு மிக முக்கியமான மற்றும் பரபரப்பான ஆண்டாக அமையவுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்கள்:
ஆடவர் டி20 உலகக் கோப்பை: பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. நடப்புச் சாம்பியனான இந்தியாவைச் சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்; அவரது கேப்டன்சி மற்றும் ஃபார்மிற்கு இது ஒரு முக்கியத் தொடராக இருக்கும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வேகத்தில், இந்திய மகளிரணி ஜூன் 12 முதல் இங்கிலாந்தில் தொடங்கும் டி20 உலகக் கோப்பையை வெல்ல முனைப்புக் காட்டி வருகிறது.
யு-19 உலகக் கோப்பை: ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.
முக்கியத் தொடர்கள் மற்றும் லீக் போட்டிகள்:
மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஜனவரி 9 - பிப்ரவரி 5
ஐபிஎல் (IPL 2026) மார்ச் 26 - மே 31
இங்கிலாந்து சுற்றுப்பயணம் - ஜூலை மாதம் (ODI & T20)
நியூசிலாந்து சுற்றுப்பயணம்- அக்டோபர் - நவம்பர் (Test, ODI & T20)
ஆண்டு முழுமைக்கான புள்ளிவிவரம்:
இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி (உலகக் கோப்பை தவிர்த்து) மொத்தம் 18 ஒருநாள் போட்டிகள், 29 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜனவரி 11-ல் நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் தொடங்கும் இந்தப் பயணம், டிசம்பரில் இலங்கை அணியின் இந்திய வருகையுடன் நிறைவடைகிறது. 2026-ஆம் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் மைதானங்களில் கொண்டாட்டம் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
Indian cricket in 2026 ipl and 3 World Cups