காலையிலே காதுக்குவந்த ஷாக் செய்தி! கிடுகிடுவென மீண்டும் உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை! - Seithipunal
Seithipunal


சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ரூ.16 அதிகரிக்கப்பட்டு தற்போது புதிய விலை ரூ.1,980.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் ரூ.61.50 உயர்வுடன் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த மாதமும் விலை உயர்வு மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

அதே சமயத்தில், வீட்டு உபயோக 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 என்ற நிலையிலேயே தொடர்கிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களே வணிக சிலிண்டர் விலையை அதிகரிக்க காரணமாக உள்ளன.

இந்த விலை உயர்வு சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் தினசரி செயல்பாடுகளை பாதிக்கக்கூடும். உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள் போன்ற வணிக துறைகளில் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதால், இது பொதுமக்களுக்கு நேரடியாக பொருளாதார சுமையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increase in cylinder price for commercial use


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->