தேர்தல் ஆணையம் சென்ற அதிமுக! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மகளிருக்கு ரூ.1000 குறித்து அறிவித்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மகளிர் உரிமைத்தொகை, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இது தேர்தல் விதிமுறை மீறல் என்று அதிமுக குற்றஞ்சாட்டிய நிலையில், ஏற்கனவே அறிவித்த திட்டம் குறித்து பேசுவது விதிமீறல் இல்லை என்று ஸ்டாலின் விளக்கமளித்தார்.

மேலும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்ததாகவும் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட காட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது, அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மகளிர் உரிமைத்தொகை, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, தேர்தல் நடத்தை விதிகளை மீறி அறிவித்ததாகவும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்ததாகவும்  தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Inbadurai ADMK Election Commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->