மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்..! அடித்துநொறுக்கிய பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி நாளொன்றுக்கு 91 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியை சார்ந்தவர் மதுரைவீரன். இவரது தங்கையின் பெயர் தனலட்சுமி (வயது 36). இவர் வாய் பேச இயலாத, மனநலம் குன்றியவர் ஆவார். 

இவரது தாய் தந்தை இறந்துவிட்ட நிலையில், இவரது அண்ணனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் இன்று காலை நேரத்தில் அங்குள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார். 

இதனை கவனித்த இப்பகுதியை சார்ந்த முனியாண்டி (வயது 35) என்ற கொடூரன், தனலட்சுமியை முட்புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். கொடூரனின் கொடூரத்தால் வலிதாங்க இயலாத பெண்மணி அலறியுள்ளார். 

இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த வயல்வெளி வழியாக சென்ற நபர்கள் முனியாண்டியிடம் இருந்து தனலட்சுமியை மீட்கவே, அப்பகுதி மக்கள் விஷயம் அறிந்து மொத்தமாக திரண்டனர். 

பொதுமக்கள் கூடியதை கண்டு அதிர்ச்சியடைந்த முனியாண்டி தப்பியோட முயற்சிக்கவே, இவனை மடக்கிப்பிடித்த மக்கள் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து இது தொடர்பாக இராசபாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முனியாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், முனியாண்டிக்கு திருமணம் முடிந்து மனைவி உயிரிழந்த நிலையில், பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Viruthunagar mentally affected girl sexual harassment


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal