புதுச்சேரியில் ஒரே இடத்தில் பணி புரியும் அதிகாரிகள் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்; மீறினால் நடவடிக்கை; ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவு..!
Puducherry Governor Kailashnathan has ordered the transfer of officers and staff who have been working at the same location
புதுச்சேரியில் அதிகாரிகள், ஊழியர்கள் 03 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாறுதல் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், பதவி உயர்வு வேண்டாம் என ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 09 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 04 மே அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) தலைவர் ந. ரங்கசாமி ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

என்டிஏ கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாமல் இழுபறி நீடித்து வருவதால், அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் போக்குவரத்து பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்படுவதால் நீண்டகாலமாக நடக்கும் பால பணிகளை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, அனைத்து துறை தலைவர்கள், துறைச்செயலர்களை அழைத்து துறை பிரச்சினைகளை கேட்டறிந்தார். அப்போது, குறிப்பாக 03 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துறைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருவதால் ஏற்படும் விஷயங்களை கேட்டறிந்தார்.

இதனை தொடந்து, அதிகாரிகள், ஊழியர்கள் 03 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாறுதல் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், பதவி உயர்வு வேண்டாம் என ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், பிராந்திய அளவிலான இடமாற்றங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் வேண்டும், இந்த உத்தரவுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Puducherry Governor Kailashnathan has ordered the transfer of officers and staff who have been working at the same location