முன்னேறிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை விட எல்பிஜி விலை இந்தியாவில் தான் குறைவு; பட்டியலிட்டு விளக்கமளித்துள்ள மத்திய அரசு..!
The Central Government has provided a detailed explanation showing that LPG prices in India are lower than in other countries
அணுஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா- இஸ்ரேல் இணைத்து ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மூண்ட போர், இன்னும் முடிவை எட்டாமல் தொடர்ந்து வருகிறது.
இதன்காரணமாக, ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கிய எரிவாயுவை பிற நாட்டுக்கு கொண்டுவரும் கடல் மார்க்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலாகி நாடுகளில் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், நாட்டின் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இந்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. அதன்படி, இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

இந்த சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவு என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தலைநகர் டெல்லியில்14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 942 ரூபாய் என்றும், உஜ்வலா திட்டத்தின் கீழ் 300 ரூபாய் மானியம் அளிக்கப்படுவதால் ஏழ்மையிலுள்ள பல குடும்பங்கள் 642 ரூபாய் விலையில் சிலிண்டர் வாங்க முடிகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதே எரிவாயு, பாகிஸ்தானில் இது 1046 ரூபாய், நேபாளத்தில் 1207 ரூபாய், வங்கதேசத்தில் 1225 ரூபாய், இலங்கையில் 1241 ரூபாயாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், முன்னேறிய நாடுகளில் அமெரிக்காவில் 1755 ரூபாய், ஆஸ்திரேலியாவில் 1765 ரூபாய், கனடாவில் 2411 ரூபாய்க்கு விற்பதாகவும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா தனது எரிவாயு தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் வாங்குவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.
English Summary
The Central Government has provided a detailed explanation showing that LPG prices in India are lower than in other countries