தந்தைக்கு விபத்து ஏற்பட்டதாக கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரம்.! வேலூரில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டி பகுதியில் உள்ள கிராமத்தை சார்ந்த கூலித் தொழிலாளியின் 11 வயதுடைய மகள் அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில்., திளைத்திகை பகுதியை சார்ந்த வினோத் (வயது 30) என்ற காம கொடூரன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறான்.

இவன் நேற்று மாலை நேரத்தில் மாணவி பயின்று வரும் பள்ளிக்கு சென்று., மாணவியின் தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளதாகவும்., உடனடியாக தந்தை அழைத்து வர சொன்னதாகவும் கூறியுள்ளான். இதனால் பதறிப்போன சிறுமி அவனுடன் செல்லவே., அங்குள்ள கணாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.

இந்த நிலையில்., மாணவியிடம் ஆற்றில் கொடூரன் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில்., மாணவியை வினோத் அழைத்து சென்ற தகவல் மற்றும் தந்தையின் விபத்து குறித்த தகவலை சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து மாணவியின் குடும்பத்தாருக்கு தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை தனக்கு விபத்து நேரவில்லை என்று கூறவே., மாணவியை தேடி உறவினர்கள் விரைந்து சென்றுள்ளனர். இந்த நேரத்தில்., கணாற்று பகுதியில் சென்ற போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டனர். 

ஆத்திரமடைந்த உறவினர்கள் அனைவரும் வினோத்தை அடித்து நொறுக்கிய நிலையில்., படுகாயமடைந்த வினோத் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore girl sexual torture police investigation and arrest


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal