வேலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே உள்ள கிழக்காடு தெருவை சேர்ந்தவர் மோகன் தாஸ் (வயது 62). முதியவரான இவர் கடந்த 2014 ஆம் வருடத்தின் ஜூலை மாதம் 30 ஆம் தேதியன்று., இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு சாக்லேட் வாங்க ஆசைப்பட்ட சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு பின்னர் வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற சிறுமிக்கு திடீரென காய்ச்சலானது ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை அடுத்து., சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

sexual harassment, sexual torture, sexual abuse, rapped, child sexual harassment,

இதனையறிந்து அதிர்ச்சியான பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மோகன்தாஸை கைது செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செல்வம்., மோகன் தாஸிற்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும்., ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும்., அவரது அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில்., கூடுதலாக ஓராண்டு சிறை என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore child sexual harassment case court order jail


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal